/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீரராக்கியம் பிரிவில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
/
வீரராக்கியம் பிரிவில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
வீரராக்கியம் பிரிவில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
வீரராக்கியம் பிரிவில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 17, 2024 12:11 PM
கரூர்: கரூர் அருகே, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதிகளவில் விபத்துக்கள் நடந்த பகுதிகள் என, கண்டறியப்பட்ட கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, சேலம் தேசிய நெடுஞ்சாலை பெரிச்சுபாளையம் பிரிவுகளில், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. மேலும், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தளவாப்பாளையம் பிரிவில், விரைவில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம், மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. செம்மடை பிரிவில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள், கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வீரராக்கியம் பிரிவில், உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வீரராக்கியம் பிரிவில் நடந்த விபத்துகளில், பலர் உயிரிழந்துள்ளனர். அதை கண்டித்து, பல முறை வீரராக்கியம் பிரிவில், சாலை மறியல் போராட்டம் நடந்துள்ளது. இந்நிலையில் சேலம் மற்றும் மதுரை நெடுஞ்சாலைகளில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல், வீரராக்கியம் பிரிவிலும், உயர்மட்ட பாலம் கட்ட, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

