/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி பாலத்தில் இரண்டு சரக்கு லாரி மோதி விபத்து
/
காவிரி பாலத்தில் இரண்டு சரக்கு லாரி மோதி விபத்து
ADDED : செப் 01, 2024 04:24 AM
குளித்தலை: குளித்தலை, பெரியார் காவிரி பாலத்தில் இரண்டு சரக்கு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரை-வர்கள், பைக் ஓட்டி வந்தவர் உயிர் தப்பினர்.
கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவநாரா-யணன், 57. இவர் அரியலுாரில் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்-கொண்டு கோழிக்கோடு நோக்கி நேற்று மாலை 5:00 மணிய-ளவில் லாரியில் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை சேர்ந்த லாரி டிரைவர் சோலை பாண்டியன், 57, விராலிமலையில் இருந்து, பசை பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒசூர் நோக்கி சென்றார்.
இரண்டு சரக்கு லாரிகளும், குளித்தலை-முசிறியை இணைக்கும் பெரியார் காவிரி பாலத்தில் சிமென்ட் லாரி எதிரே வந்த லாரி ஓரப்பகுதியில் மோதியது. சிமென்ட் லாரியின் முகப்பு முற்றிலும் சேதமானது. அதில் வந்த ஓட்டுனர் சிவநாராயணன் கை, காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்றொரு லாரியின் ஆக்ஸில் கட்டானது. இதில் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னையன், 50, டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கில், பாலத்தில் இருந்து கால்நடைகளுக்கு புல் கட்டுகளை பின்னால் வைத்துக் கொண்டு ஓரமாக சென்றார். அப்போது விபத்-துக்கு உள்ளான, விராலிமலையில் இருந்து சென்ற லாரி பின்ப-குதி டயரில் பைக் சிக்கிக்கொண்டது. இந்த விபத்தால், பாலத்தில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
பின், குளித்தலை போலீசார் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.