/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் தபால் நிலையம் சார்பில் நடை பயணம்
/
கரூர் தபால் நிலையம் சார்பில் நடை பயணம்
ADDED : ஆக 15, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அஞ்சல் கோட்டம் சார்பில், சுதந்திர தின விழாவையொட்டி, நேற்று நடைபயணம் நடந்தது.
கரூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய, நடை பயணத்தை கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி தொடங்கி வைத்தார். ஜவஹர் பஜார், மடவாளகம் தெரு, சன்னதி தெரு வழியாக, தலைமை தபால் நிலையத்தை பேரணி அடைந்தது. நடைபயணத்தில், கோட்ட துணை அலுவலர் மனோஜ், தலைமை தபால் நிலைய அதிகாரி ஜெகதீசன் மற்றும் தேசிய கொடியுடன், 70க்கும் மேற்பட்ட தபால் நிலைய ஊழியர்கள் பங்கேற்றனர்.