/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவு தீபம் ஏற்றி உறுதி மொழி ஏற்பு
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவு தீபம் ஏற்றி உறுதி மொழி ஏற்பு
100 சதவீதம் ஓட்டுப்பதிவு தீபம் ஏற்றி உறுதி மொழி ஏற்பு
100 சதவீதம் ஓட்டுப்பதிவு தீபம் ஏற்றி உறுதி மொழி ஏற்பு
ADDED : ஏப் 05, 2024 04:43 AM
குளித்தலை: குளித்தலையில், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் 100 சதவீத வாக்களிக்க வேண்டி அகல் விளக்கு தீபம் ஏற்றி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் கிழக்கு தேர் வீதியில் நேற்று முன்தினம் இரவு, மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களை கொண்டு அகல் விளக்கு தீபம் ஏற்றி, 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் 100 சதவீத வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆர்.டி.ஓ.வும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான தனலட்சுமி தலைமை வகித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கரூர் மாவட்ட மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் ராஜேஷ், கார்த்திகேயன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், தாசில்தார் சுரேஷ், வட்டார இயக்க மேலாளர் ஜானகி, ஆர்.ஐ., ஸ்ரீவித்யா ஆகியோர் தேர்தல் விழிப்புணர்வு குறித்து பேசினர்.
இதில், வாக்களிப்பது நமது கடமை, வயது வந்த அனைவரும் வாக்களிப்போம், நமது ஓட்டு நமது உரிமை, எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல, வாக்களிக்க உறுதி அளிப்போம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இந்திய வரைபடத்தில், ஒரு விரலில் மை வைத்தல், அகல் விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள், வருவாய்த்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

