/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கள்ளப்பள்ளி அரசு கல்லுாரி மாணவர் விடுதியில் 11 மொபைல் போன் திருட்டு

ADDED : ஆக 01, 2025 01:46 AM
குளித்தலை, அரசு கல்லுாரி விடுதியில் இருந்து, மாணவர்களின், 11 மொபைல்போன்கள் திருடப்பட்டுள்ளன.
குளித்தலை அடுத்த கழுகூர் பஞ்., மாகாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 45. இவர், கள்ளப்பள்ளியில் உள்ள சமூக நீதி கல்லுாரி மாணவர் விடுதியில், வார்டனாக பணியில் இருந்து வருகிறார். விடுதியில் குளித்தலை, முசிறி அரசு கலைக் கல்லுாரியில் படித்து வரும், 75 மாணவர்கள் தங்கி கல்லுாரிக்கு சென்று வருகின்றனர். மாணவர்கள் தங்களது மொபைல்போன்களை, இரவு நேரத்தில் சார்ஜ் போட்டுவிட்டு அறையில் துாங்குவது வழக்கம்.
கடந்த 29ம் தேதி அதிகாலை, 4:30 மணியளவில் மாணவர் ஆனந்த் என்பவர், சார்ஜ் போட்ட இடத்தில் பார்த்தபோது மொபைல்போனை காணவில்லை. வினித் என்ற மாணவனிடம் இருந்த மொபைலில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் என வந்தது. உடனே அருகில் இருந்த மாணவர்கள், மொபைல்போன் சார்ஜ் ஆகி விட்டதா என்று பார்க்க சென்ற போது, 10 பேரின் மொபைல்போன் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்நிலையில், 11 மாணவர்களும், வார்டன் சதீஷ்குமாரும் போலீசில் புகார் அளித்தனர். லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.