/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காரில் 16 ஆடுகள் திருட்டு 3 பேர் கைது; 2 பேருக்கு வலை
/
காரில் 16 ஆடுகள் திருட்டு 3 பேர் கைது; 2 பேருக்கு வலை
காரில் 16 ஆடுகள் திருட்டு 3 பேர் கைது; 2 பேருக்கு வலை
காரில் 16 ஆடுகள் திருட்டு 3 பேர் கைது; 2 பேருக்கு வலை
ADDED : அக் 01, 2024 06:59 AM
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் ஆடு, மாடு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில், கடந்த, 27ல், அரவக்குறிச்சி அருகே, ஆண்டிபட்டிக்கோட்டையில், 'இனோவா' காரில் வந்த, 5 பேர், 16 ஆடுகளை களவாடினர்.
இதுகுறித்து புகார்படி, அரவக்குறிச்சி போலீசார், விசாரித்து வந்தனர். மேலும், 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், கொடைக்கானல் கீழ் மலையை சேர்ந்த, பா.ஜ., இளைஞரணி முன்னாள் ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், 38, சதீஷ்குமார், 26, சிவக்குமார், 25, உட்பட, 5 பேர், ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து, 3 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும், ஒரு ஆட்டுக்குட்டி, காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள, 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.