/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பருவ மழை வேண்டி 1,650 திருவிளக்கு பூஜை
/
பருவ மழை வேண்டி 1,650 திருவிளக்கு பூஜை
ADDED : ஆக 19, 2024 03:17 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., வெள்ளப்பட்டியில், மஹா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், திருவிளக்கு பூஜை நடைபெறும். அதன்படி, இந்தாண்டு, விவசாயம் செழிக்க பருவ மழை வேண்டி, 20ம் ஆண்டு திருவிளக்கு பூஜை, நேற்று முன்தினம் நடந்தது. இதில் பூஜைக்கு வந்த பெண்கள், ஐந்துமுக பித்தளை குத்துவிளக்கு-களை கொண்டு வந்திருந்தனர். பூஜை பொருட்கள் அனைத்தும் விழாக்குழுவினர்களால் வழங்கப்பட்டு, நான்கு கட்டமாக பூஜை நடத்தினர்.
இத்திருவிளக்கு பூஜையின் சிறப்பம்சமாக, 1,650 பெண்கள், விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். பின், சிறப்பு அலங்காரம் செய்-யப்பட்டு, அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவ-ருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

