ADDED : ஜூலை 26, 2026 06:12 AM
கரூர்:''கரூர் மாநகராட்சியில், 9,207 தெரு நாய்கள் உள்ளன,'' என, கரூர் கலெக்டர் முத்துக்குமரன் கூறினார்.
கரூர் மாநகராட்சியில், நாய்களுக்கான கருத்தடை மையத்தை பார்வையிட்ட பின் அவர் கூறியதாவது:நாய்களின்
எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், வெறிநாய் நோய் பரவலை
தடுக்கவும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 9,207 தெரு நாய்கள்
கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், 1,842 நாய்களுக்கு கருத்தடை அறுவை
சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தடை
அறுவை சிகிச்சை, மருத்துவ உபகரணங்கள், சுகாதார நடைமுறை உள்ளிட்டவை
குறித்து ஆய்வு செய்தார். மேலும், கால்நடை மருத்துவர்கள் மற்றும்
மாநகராட்சி அலுவலர்களிடம் கருத்தடை திட்டத்தின் செயல்பாடுகள்,
நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும்
நடவடிக்கை, விலங்குகளின் நலனை உறுதி செய்யும் வகையில் தரமான மருத்துவ
சேவை வழங்கப்பட வேண்டும் என்றார்.ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் பிரித்விராஜ் உடனிருந்தார்.
