ADDED : நவ 01, 2025 01:20 AM
குளித்தலை, குளித்தலை, அண்ணா நகரில் செயல்படும் தனியார் மருத்துவமனை முன் நேற்று முன்தினம் அதிகாலை வைகைநல்லுார் அக்ரஹாரத்தை சேர்ந்த கவுதம் மற்றும் கிருஷ்ணராயபுரம் சாலப்பட்டியை சேர்ந்த பழனியப்பன் ஆகிய இருவரும் சிகிச்சை முடிந்து வெளியில் வந்து பார்த்தபோது, இருவரின் பைக்குகளும் திருடப்பட்டது தெரியவந்தது.
குளித்தலை போலீசார் விசாரித்து வந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் கன்னியாகுமரி மாவட்டம், அம்பேத்கர் நகரை சேர்ந்த முத்தையா மகன் விஜய், 27, திருச்சி மாவட்டம், வடக்கு தாராநல்லுாரை சேர்ந்த குணசேகரன் மகன் விஷ்ணு, 39, ஆகியோர் பைக் திருடியதை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். குளித்தலை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

