/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே குவிந்துள்ள குப்பை துர்நாற்றத்தால் பொதுமக்கள் பீதி
/
கரூர் அருகே குவிந்துள்ள குப்பை துர்நாற்றத்தால் பொதுமக்கள் பீதி
கரூர் அருகே குவிந்துள்ள குப்பை துர்நாற்றத்தால் பொதுமக்கள் பீதி
கரூர் அருகே குவிந்துள்ள குப்பை துர்நாற்றத்தால் பொதுமக்கள் பீதி
ADDED : நவ 01, 2025 01:20 AM
கரூர், கரூர் அருகே, சாலையில் குப்பை கொட்டப்படுவதால், துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர்-ஈரோடு சாலை ரெட்டிப்பாளையம் பகுதியில் வீடுகள், வியாபார நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ரெட்டிப்பாளையம் பகுதியில், கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது.
பலமான காற்று வீசும் போது, சாலையில் சிதறுகின்றன. அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக, குப்பையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.
எனவே, கரூர்-ஈரோடு சாலை ரெட்டிப்பாளையம் பகுதியில் தேங்கியுள்ள, குப்பைகளை அகற்ற, ஆண்டாங்கோவில் கிழக்கு கிராம பஞ்சாயத்து நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.