/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பதவி உயர்வு பெற்ற 2 கிராம உதவியாளர்
/
பதவி உயர்வு பெற்ற 2 கிராம உதவியாளர்
ADDED : ஜூன் 14, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த குமாரமங்கலத்தில் கிராம உதவியாளராக பணியில் இருந்த குமரேசன், தோகைமலை கிராம உதவியாளராக இருந்த பெரியண்ணன் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். குமரேசன் வி.ஏ.ஓ..வாக பதவி உயர்வு பெற்று, நங்கவரம் தெற்கு-2 கிராமத்தில் பதவியேற்று கொண்டார்.
பெரியண்ணன் கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பதவி உயர்வுடன் பதவியேற்று கொண்டார். இருவரும் சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, தாசில்தார் இந்துமதி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.