/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க., கூட்டத்தில் 40 பேர் பலி: கரூரில் வர்த்தக நிறுவனங்கள் மூடல்

ADDED : செப் 29, 2025 02:24 AM
கரூர்:கரூரில், த.வெ.க., பிரசார கூட்டத்தில் சிக்கி, 40 பேர் உயிரிழந்தன்ர. இந்த சம்பவத்துக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், நேற்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.கரூர், வேலுச்சாமிபுரத்தில், நேற்று முன்தினம் இரவு, த.வெ.க., பிரசார கூட்டத்தில் ஏற்ப்டட நெரிசலில் சிக்கி, 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால், கரூர் வர்த்தக சங்க தலைவர் ராஜூ, செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர், உயிரிழப்பு சம்பவத்துக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நேற்று, கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து, நேற்று கரூர் ஜவஹர் பஜார், கோவை சாலை, காமராஜ் மார்க்கெட், வெங்கமேடு, தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.