ADDED : அக் 23, 2026 07:02 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., பகுதியில், வரி செலுத்துவோருக்கு, 5 சதவீத ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு
நகர்புற உள்ளாட்சி சட்டத்தின்படி, அரையாண்டு தொடங்கிய தேதியில்
இருந்து, 30 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு,
அதிகபட்சமாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி, 15 வார்டுகளிலும் உள்ள சொத்து வரி
உரிமையாளர்கள் 2026-27 இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை
வரும், 30ம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்
ஆவர்.
மேலும் மக்கள் வசதிக்காக வரியுடன் காலிமனை வரி, தொழில் வரி,
குடிநீர் கட்டணம் மற்றும் உரிமம் கட்டணம் செலுத்த பேரூராட்சி கணினி
வசூல் மையம் சனிக்கிழமை தோறும் செயல்படுகிறது.
பேரூராட்சி
இணையதளம் மூலமாகவும் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, உரிய காலத்திற்குள்
வரிகளை செலுத்தி, 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
