/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று பிளஸ் 2 தேர்வு தொடக்கம் 9,725 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
/
இன்று பிளஸ் 2 தேர்வு தொடக்கம் 9,725 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
இன்று பிளஸ் 2 தேர்வு தொடக்கம் 9,725 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
இன்று பிளஸ் 2 தேர்வு தொடக்கம் 9,725 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
ADDED : மார் 01, 2024 02:31 AM
கரூர்:இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், கரூர் மாவட்டத்தில், 9,725 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகத்தில்
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் வரும், 22ம் தேதி வரை நடக்கிறது.
இதில் கரூர் மாவட்டத்தில், 43 தேர்வு மையங்களில், 104 மேல்நிலைப்
பள்ளிகளில் பயிலும், 9,623 மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்களாக, 102
பேர் என மொத்தம், 9,725 பேர் தேர்வெழுத உள்ளனர். இரு இடங்களில்
வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில்
மேல்நிலை பொதுத் தேர்வுக்கான காப்பகத்தில், 24 மணி நேரமும் ஆயுதம்
தாங்கிய போலீசார் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேர்வு
மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக, 46 தலைமை
ஆசிரியர்கள், 46 துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்களாக, 822
ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுகளில்
முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில்
ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு, கலெக்டர்
தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும், 120 பேர் கொண்ட
பறக்கும் படைகள் அமைக்கப்படுகிறது. பறக்கும் படையினர் தேர்வு
மையங்களை எந்த நேரத்திலும் பார்வையிட்டு, ஒழுங்கீன செயல்களில்
ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்வர் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

