/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கருங்கல் கடத்தியதாக இருவர் மீது வழக்கு
/
கருங்கல் கடத்தியதாக இருவர் மீது வழக்கு
ADDED : செப் 28, 2024 01:07 AM
கருங்கல் கடத்தியதாக
இருவர் மீது வழக்கு
கரூர், செப். 28-
வேலாயுதம்பாளையம் அருகே, வேனில் அனுமதி இல்லாமல் கருங்கல் கடத்தியதாக, இரண்டு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்ட, சுரங்கத்துறை ஆய்வாளர் சந்துரு, 37, உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று முன்தினம், வேலாயுதம்பாளையம் அருகே, கரூர்-புன்னம் சத்திரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேனில் அனுமதி இல்லாமல், இரண்டு யூனிட் கருங்கல் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, சுரங்கத்துறை ஆய்வாளர் சந்துரு கொடுத்த புகாரின்படி, வேன் உரிமையாளர் குமணன், 51, டிரைவர் மகேந்திரன், 33, ஆகியோர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.