/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பீரோவில் இருந்த நகை திருட்டு உறவு பெண் மீது வழக்கு பதிவு
/
பீரோவில் இருந்த நகை திருட்டு உறவு பெண் மீது வழக்கு பதிவு
பீரோவில் இருந்த நகை திருட்டு உறவு பெண் மீது வழக்கு பதிவு
பீரோவில் இருந்த நகை திருட்டு உறவு பெண் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 20, 2024 01:25 AM
பீரோவில் இருந்த நகை திருட்டு
உறவு பெண் மீது வழக்கு பதிவு
குளித்தலை, அக். 20-
நச்சலுாரில், பீரோவில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலி திருடிய உறவுக்கார பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் சசிகலா, 31. விவசாய கூலி தொழிலாளி. இவரது சித்தி மகள் மேலகுட்டப்பட்டியை சேர்ந்த வித்யா, 24. கடந்த, 12ல் தனது குழந்தையுடன் வீட்டிற்கு வந்தார். இரண்டு நாட்கள் தங்கி இருந்தார், இந்நிலையில், சசிகலா விவசாய வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டு பவுன் கோதுமை மாடல் தங்க சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து சசிகலா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் அவரது சித்தி மகளான வித்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.