sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனைவரின் வளர்ச்சியை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்

/

அனைவரின் வளர்ச்சியை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்

அனைவரின் வளர்ச்சியை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்

அனைவரின் வளர்ச்சியை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்


ADDED : ஜூலை 23, 2024 11:56 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : அனைவரின் வளர்ச்சியை உள்ளடக்கியதாக, மத்திய பட்ஜெட் உள்ளது என, பல்வேறு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மே-ளன மாநில செயலாளர் கே.ரவீந்திரகுமார்: தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக குறைக்கப்படுவது, பிளாட்டினத்திற்கு சுங்கவரி, 6.4 சதவீதமாக குறைக்கப்படுவது நடுத்தர மக்களுக்கு சாதகமானது. இதனால் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக தங்கம் கொண்டு வரு-வது குறையும். இந்த அறிவிப்பு வந்த, சில மணி நேரங்களி-லேயே தங்கம் ஒரு பவுனுக்கு, 2,000 ரூபாய்க்கு மேல் குறைந்-துள்ளது. சுற்றுலா பயணிகள் வெளிநாடுகள் செல்லும் போது தங்கம் வாங்குகின்றனர். இனி, 10 முதல் 15 சதவீதம் வரை தங்-கத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தரும்.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன, மாநில செயலாளர், ஏ.சி.மோகன்: ஒரு கோடி விவசாயிகளுக்கு, இரு ஆண்டு

களில் இயற்கை வேளாண் பற்றிய விழிப்புணர்வும் ஊக்கமும் வழங்குவோம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மூலம், இயற்கை சீற்றம் எதிர் கொள்ள விதைகள் அறிமுகம் செய்வது நல்ல நடவடிக்கையாகும். தனி நபர் வருமான வரியில் மாற்றம், வருமான வரி தாக்கலை எளி-மைப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. முத்ரா திட்டத்தின் கீழ் வணிக நிறுவனங்களுக்கு, 10 லட்சத்தில் இருந்து, 20 லட்சம் ரூபாய் என வங்கி உதவி தொகையை உயர்த்தி இருப்பது பாராட்-டுக்குரியது.

காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம்: வேளாண் துறையில் டிஜிட்டல் முறை புகுத்தப்படும். டிஜிட்டல் முறையில் காரீப் வேளாண் பொருட்கள் தொடர்பான சர்வே எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மாநில அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களோடு இணைந்து பல்வேறு நகரங்கள் வளர்ச்சி மைய-மாக மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு உள்ளது.

இந்திய தொழில் கூட்டமைப்பு. கரூர் மாவட்ட முன்னாள் தலைவர், எஸ்.புஷ்பராஜன்: வேளாண், சிறு குறு தொழில், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, மகளிர் பங்களிப்பு உள்-ளிட்ட ஒன்பது நோக்கங்களை மையமாக கொண்டு பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக, ஒரு கோடி மதிப்பீட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில்களுக்கான கடன் உதவியை வங்கிகளிடம் பெறுவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, சிறு குறு தொழில்களை விரிவுபடுத்த உதவி செய்யும். அதேநேரத்தில், சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமான வரி முறையில் மாற்றம் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றமே.

கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன்: வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைக-ளுக்கு, 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பல மாநிலங்களில் போதிய சேமிப்பு கிடங்கு இல்-லாமல், உணவு தானியங்கள் மழையில் நனைந்து வீணாகிறது. இதை பாதுகாக்க கிடங்குகள் கட்ட நிதி ஒதுக்கீடு இல்லை என்-பது வருத்தம் அளிக்கிறது. திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்ப-டுத்தப்படும் போன்றவை நல்ல அம்சமாகும்.

கரூர் ஜவுளி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் பி.கோபாலகிருஷ்ணன்: தொழிலாளர்களின் வளர்ச்சி எண்-ணிக்கை அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் வர-வேற்கத்தக்கது. ஜவுளி துறை சார்ந்து திட்டங்களோ, அறிக்-கையோ இல்லாததது ஏமாற்றத்தை கொடுப்பதாக உள்ளது. இருப்பினும், அதிகப்படியான ஜவுளி நிறுவனங்கள் குரு சிறு, நடுத்தர நிறுவனங்களின் பிரிவில் வருவதால் ஜவுளித்துறை பயன் அடையும்.

கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் பேக்டரி ஓனர்ஸ் சங்க தலைவர், ஆர்.தனபதி: இரண்டு ஆண்டுகளாக மிகவும் சிரமத்தில் உள்ள, ஜவுளி தொழில்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திட்-டமோ, ஊக்கத்தொகை திட்டமோ எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்பது ஏமாற்றம். அரசுக்கு வருமான வரியும் குறையும், தொழில் உற்பத்தியும் குறையும், பொதுமக்கள் வேலை வாய்ப்பு இழக்கும் நிலைமை உருவாகும்.






      Dinamalar
      Follow us