/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை ஸ்டேஷனரி கடையில் தீ விபத்து
/
குளித்தலை ஸ்டேஷனரி கடையில் தீ விபத்து
ADDED : ஆக 29, 2024 07:47 AM
குளித்தலை: குளித்தலை, ஸ்டேஷனரி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
குளித்தலை பஸ் ஸ்டாண்டு வளாகத்தில், ஸ்டேஷனரி கடை உள்ளது. இந்த கடையை ஜானகிராமன் என்பவர் நடத்தி வருகிறார். காலையில் கடையை திறந்தவுடன் சுவாமிக்கு விளக்கேற்றினார். 11:30 மணியளவில் கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றார். அப்போது, கடையில் இருந்து புகை வருவதை அறிந்த பயணிகள், கார் டிரைவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் வருவதற்கு முன், அருகில் இருந்த பொது மக்கள் கடை பூட்டை உடைத்து, தீயை அணைத்தனர். 5,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஏற்பட்டது. முசிறி தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் தடுக்கும் வகையில் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.

