/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு 120 அடியில் மாலை
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு 120 அடியில் மாலை
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு 120 அடியில் மாலை
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு 120 அடியில் மாலை
ADDED : ஜன 02, 2026 04:56 AM
கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சிவாய நம குழு சார்பில், கோபுரத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இங்கு, 120 அடி உயரம், 180 கிலோ எடை கொண்ட ஏழு வகையான மலர் மாலைகள் ராஜ-கோபுரத்தின் உச்சியிலிருந்து, அடிவாரம் வரை அணிவிக்கப்பட்-டது.
அதில், செவ்வந்தி, பச்சை, துளசி, விரிச்சி, மாசி பச்சை, கோழி கொண்டை, மல்லிகைப்பூ உள்ளிட்ட ஏழு வகையான வண்ண மலர்களைக் கொண்டு ராஜ கோபுரத்தின் உச்சியில் சாத்-தப்பட்டது. முன்னதாக புகழ் சோழர் மண்டபத்தில் மலர் மாலைக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.