/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி பள்ளியில் வீணாக கிடக்கும் ஜெனரேட்டர்
/
மாநகராட்சி பள்ளியில் வீணாக கிடக்கும் ஜெனரேட்டர்
ADDED : ஆக 16, 2024 05:29 AM
கரூர் : கரூர் மாநகராட்சி பள்ளியில், பயன்படுத்தாமல் ஜெனரேட்டர் வீணாக கிடக்கிறது.கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
100 ஆண்டுகள் பழமையான பள்ளியில், 2021ம் ஆண்டு தனியார் வங்கி, கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, 15 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 1 ஆசிரியர் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. அப்போது, பள்ளியின் பயன்பாட்டுக்கு என ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளது. அது வீணாகி கிடக்கிறது.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: அடிக்கடி மின்தடை ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மாதத்திற்கு ஒரு நாள் மின்வாரியம் சார்பில், பராமரிப்பு பணிகள் நடக்கும் போது, நகரம் முழுவதும் காலையிலிருந்து மாலை வரை மின்தடை அமலில் இருக்கும். அந்த நேரத்தில் பள்ளியில் கல்வி கற்கும் பணி பாதிக்கக் கூடாது என்பதற்காக, நன்கொடையாக ஜெனரேட்டர் வழங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெனரேட்டர் உபயோகப்படுத்தாமல் வீணாக கிடக்கிறது.ஜெனரேட்டருக்கு இயக்க, 15 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இதற்கு, அரசிடம் நிதி ஒதுக்கீடு கிடையாது என்பதால், சிலரின் உதவியுடன் டீசல் வாங்கி பயன்படுத்தி வந்தோம். தொடர்ந்து உதவி பெறமுடியவில்லை. டீசல் செலவுக்கு பணம் இல்லாமல் ஜெனரேட்டர் பயன்படுத்த முடியவில்லை. ஜெனரேட்டருக்கு பதில், யு.பி.எஸ். வழங்கி இருந்தால் உபயோகமாக இருந்து இருக்கும். இவ்வாறு கூறினர்.

