/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை தடுப்பு சுவரில் அழகு சேர்த்த ஓவியம்
/
சாலை தடுப்பு சுவரில் அழகு சேர்த்த ஓவியம்
ADDED : நவ 16, 2025 02:21 AM
கரூர்: கரூர் ஜவகர் பஜார் சாலை தடுப்பு சுவரில், வரைந்த ஓவியங்-களால் கண்ணுக்கு அழகாய் காட்சியளிக்கிறது.
கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னரில் இருந்து, ஜவகர் பஜார் சாலை லாரி மேடு வரை தடுப்பு சுவர் உள்ளது. இதில் அரசியல் கட்சி, சினிமா, விழாக்கள் தொடர்பான போஸ்-டர்களை ஒட்டுவது வழக்கம். சில விளம்பரங்கள், முகம் சுளிக்கும் வகையில் இருந்தன. இந்நிலையில், தடுப்பு சுவரில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்கவும், கண்கவர் ஓவியங்கள் வரை-யவும் முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து தடுப்பு சுவரில் உள்ள போஸ்டர்கள், கட்சி விளம்ப-ரங்கள் மாநகராட்சி சார்பில், அழிக்கப்பட்டன. பின்னர் சுவரை சுத்தம் செய்து, வண்ணம் பூசி, வன உயிரினங்கள், பூக்கள், மலைப்பிரதேசம் என, இயற்கை காட்சிகள் வரையப்படுகின்றன. அந்த வகையில் சாலைக்கு அழகு சேர்த்த வண்ண சுவரோவியம், கண்ணுக்கு இதமாய் காட்சியளிக்கிறது.

