ADDED : மே 08, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : திருப்பூர் மாவட்டம், மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 50; இவர் கடந்த, 5ல் டி.வி.எஸ்., மொபட்டில் கொடுமுடி-முத்துார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சேலம் ஆத் துார் பகுதியை சேர்ந்த சிதம்பரம், 24; என்பவர் ஓட்டி சென்ற லாரி, பாலகிருஷ்ணன் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன், கொடுமுடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து, பாலகிருஷ்ணனின் மனைவி சுதா, 39; கொடுத்த புகாரின்படி, தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

