/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் - கோவை சாலையில் உடைந்த தடுப்பு கம்பிகளால் விபத்து அபாயம்
/
கரூர் - கோவை சாலையில் உடைந்த தடுப்பு கம்பிகளால் விபத்து அபாயம்
கரூர் - கோவை சாலையில் உடைந்த தடுப்பு கம்பிகளால் விபத்து அபாயம்
கரூர் - கோவை சாலையில் உடைந்த தடுப்பு கம்பிகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 14, 2025 04:20 AM
கரூர்: கரூரில் இருந்து கோவை செல்லும் சாலை நடுவே, 2 கிலோ மிட்டர் துாரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்-ளன. இந்நிலையில், பல இடங்களில் இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்தும், வளைந்தும் காணப்படுகிறது. கோவை சாலையில் நாள்தோறும், நுாற்றுக்கணக்கான லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதை தவிர, இருசக்கர வாகனங்களிலும், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் உடைந்துள்ள தடுப்பு கம்பிகளால், கோவை சாலையில் நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நெடுஞ்-சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், விபத்து மூலம் பொதுமக்கள் படுகாயமடை-வது தொடர்கதையாக உள்ளது.
எனவே, கரூர்-கோவை சாலையில் உடைந்த நிலையில் உள்ள இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.