sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு செ.பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு செ.பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு செ.பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு செ.பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : அக் 07, 2024 03:31 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அமராவதி அணையில் இருந்து ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்-கப்பட்டுள்ளதால், கரூர் அருகே, செட்டிப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 416 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினா-டிக்கு தண்ணீர் வரத்து, 477 கன அடியாக அதிகரித்தது.

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட, 900 கன அடி தண்ணீர் வினாடிக்கு, 1,000 கன அடியாக நேற்று அதிகரிக்கப்-பட்டது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 350 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி

கொண்ட அமராவதி அணை நீர்மட்டம், 79.40 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்-டுள்ளதாலும், மழை காரணமாகவும் கரூர் அருகே, செட்டிப்பா-ளையம் அணைக்கு

தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 13,919 கன அடியாக இருந்-தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 15,707 கன அடியாக தண்ணீர்

வரத்து அதிகரித்தது. தென்கரை பாசன வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால், கிருஷ்-ணராயபுரம் பாசன வாய்க்கால் உள்ளிட்ட நான்கு வாய்க்காலில், 1,270 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 16.76 அடியாக இருந்ததால்,

நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணைப்பகு-தியில், 2.2 மி.மீ., மழை பெய்துள்ளது.மழை நிலவரம்கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 3.60, அரவக்குறிச்சி, 12, க.பரமத்தி, 1.20, குளித்தலை, 6.40, கிருஷ்ணரா-யபுரம், 3, மாயனுார், 5,

பஞ்சப்பட்டி, 5.20, மயிலம்பட்டி, 2 ஆகிய அளவுகளில் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 3.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us