/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
/
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
ADDED : அக் 09, 2024 12:56 AM
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்
அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
கரூர், அக். 9-
புகழூர் நகர அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து, நகர செயலாளர் விவேகானந்தன் தலைமையில், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா வில் மனித சங்கிலி போராட்டம்
நடந்தது.
அதில், தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்திய, தி.மு.க., அரசை கண்டித்தும், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் கமல கண்ணன், க.பரமத்தி பஞ்., யூனியன் தலைவர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணராயபுரம் நகர அ.தி.மு.க., சார்பில், பஸ் ஸ்டாப் அருகில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. நகர செயலர் ராஜா தலைமை வகித்தார். தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் உயர்வு ஏற்பட்டு, ஏழை நடுத்தர பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., அரசு மக்களுக்கு விரோதமான ஆட்சி செய்து வருகிறது என, கோஷம் எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அ.தி.மு.க., கவுன்சிலர் சிவானந்தம், இளைஞர் அணி கார்த்திக், நிர்வாகி நகுல்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* சொத்து வரி, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஆவின் பால் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், குளித்தலை பஸ் ஸ்டாண்ட் அருகே, அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தி.மு.க., அரசை கண்டித்து பேசினார்.
நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் விஜயவினாயகம், இளங்குமரன், ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித சங்கிலி போராட்டத்தில், தி.மு.க., அரசுக்கு எதிராக பதாகைகள் கையில் ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர். 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், மருதுார் டவுன் பஞ்., அலுவலகம் முன் நடந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திருநாவுக்கரசு, மருதுார் பேரூர் செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. நங்கவரம் டவுன் பஞ்., முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில், நங்கவரம் பேரூர் செயலாளர் திருப்பதி ஆகியோர் முன்னிலையில் நடந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அரவக்குறிச்சி அ.தி.மு.க., நகர செயலாளர் இளமதி, மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் உள்பட பலர் பங்கேற்றனர். பள்ளப்பட்டியில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் பள்ளப்பட்டி நகர செயலாளர் சாதிக் அலி மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்று, தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.