/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.41.20 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
/
ரூ.41.20 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
ADDED : ஜூன் 10, 2025 12:57 AM
கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்,தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 41 லட்சத்து, 20 ஆயிரத்து, 840 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 48.19, அதிகபட்சமாக, 65.69, சராசரியாக, 61.39 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 5,115 கிலோ தேங்காய்கள், மூன்று லட்சத்து 5,744 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 222.99, அதிகபட்சமாக, 225.49, சராசரியாக, 224.99, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 186.79, அதிகபட்சமாக, 222.49, சராசரியாக, 217.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 11,716 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 24 லட்சத்து, 86 ஆயிரத்து, 349 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
எள் சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 86.99,
அதிகபட்சமாக, 120.11, சராசரியாக, 116.11 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 13,247 கிலோ எடையுள்ள எள், 13 லட்சத்து, 28 ஆயிரத்து, 747 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 41 லட்சத்து, 20 ஆயிரத்து, 840 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.