/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 05, 2026 07:33 AM

கரூர்: கரூர் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோ-சனை கூட்டம், அவைத்தலைவர் திருவிகா தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது. அதில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம் பணிகள், பூத் கமிட்டி உறுப்பினர்களின் செயல்பா-டுகள், கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அறிவித்த நிறைவேற்றப்படாத வாக்கு-றுதிகளை, பொதுமக்களிடம் கொண்டு சென்று பிரசாரம் செய்தல் ஆகியவை குறித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் விளக்கமளித்து பேசினார்.
கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் சின்ன-சாமி, மாவட்ட துணை செயலாளர்கள் மல்லிகா, தங்கராஜ், ஜெயலலிதா பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செய-லாளர் தானேஷ் குமார், ஒன்றிய செயலாளர் கம-லகண்ணன் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

