/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' பணி விறுவிறு
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' பணி விறுவிறு
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' பணி விறுவிறு
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' பணி விறுவிறு
ADDED : டிச 06, 2025 03:00 AM

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டபணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கடந்த, 2023 ஆக.,ல், நாடு முழுவதும், 508 ரயில்வே ஸ்டேஷன்களில், 'அம்ரித் பாரத்' என்ற திட்டத்தின் கீழ், விரிவாக்கம் செய்யும் பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில், கரூர் ரயில்வே ஸ்டேஷன், 34 கோடி ரூபாய் செலவில், விரிவாக்க பணிகள் தொடங்கின. பின், திட்ட மதிப்பு, 37 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் கார் பார்க்கிங், புதிய கழிப்பிட வசதி, ரயில்வே ஸ்டேஷன் முகப்பு மாற்றம், கேன்டீன், பிளாட் பாரங்களில் இருக்கை வசதி, நகரும் படிக்கட்டுகள், நடை மேம்பாலம், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட பணிகள் முக்கியமானவை.கரூர் ரயில்வே ஸ்டேஷனில், வரும் மார்ச் மாதத்துக்குள், விரிவாக்க பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரித் பாரத்' திட்டப்பணிகளை, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.

