/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயமான பள்ளி மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
/
மாயமான பள்ளி மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
ADDED : டிச 06, 2025 02:57 AM
குளித்தலை: திருச்சி மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்த, 14, 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள்; காவல்காரன்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, அரசு பள்ளிக்கு சென்று வந்தனர். கடந்த, 2ல் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இருவரும், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், இருவரும் லாரியில் ஏறி, நாகப்பட்டினம் மாவட்டம், நாககூர் சென்ற லாரியில், வேலை தேடி செல்வதாக டிரைவரிடம் தெரிவித்து உடன் சென்றுள்ளனர். பின், டிவைர் சமயோசிதமாக, தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு சென்ற போலீசார், மாணவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால், மாணவர்களின் பெற்றோர், போலீசார், லாரி டிரைவருக்கு நனறி தெரிவித்தனர்.

