/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழைநீர் செல்லும் வழித்தட தடுப்பு சுவர்கள் படுமோசம்
/
மழைநீர் செல்லும் வழித்தட தடுப்பு சுவர்கள் படுமோசம்
மழைநீர் செல்லும் வழித்தட தடுப்பு சுவர்கள் படுமோசம்
மழைநீர் செல்லும் வழித்தட தடுப்பு சுவர்கள் படுமோசம்
ADDED : டிச 06, 2025 02:55 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்.,ல், பாலப்பட்டி-மேட்டுப்பட்டி சாலை செல்கிறது. இந்த சாலை நடுவே, மழைநீர் செல்லும் சிறிய பாலம் உள்ளது. பாலத்தின் கீழ் மழைநீர் செல்லும் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வழித்தடத்தில், கருங்கற்கள் கொண்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் விளைநிலங்களில் தண்ணீர் புகாமல் இருக்கும் வகையில், நீர் வழித்தடத்தில் சீராக செல்லும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டது. தற்போது, தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து, கீழே விழுந்துள்ளது. இதனால், மழை காலங்களில் பாலம் வழியாக செல்லும் தண்ணீர், தடுப்பு சுவர் சேதமாகி உள்ளதால், அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது.
இதனால் மழைநீர் சேமிப்பு குளத்திற்கு செல்ல முடிவதில்லை. எனவே, மழைநீர் செல்லும் வழித்தடங்களில் தடுப்பு சுவர்களை சரி செய்து, மழைநீர் சேமிப்பு குளத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில், பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

