/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 30, 2025 05:11 AM

கரூர்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் சுமதி தலைமையில், தான்தோன்றி மலை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். பி.எல்.ஓ., பணியில் இருந்து அங்கன் வாடி ஊழியர்களை விடுவிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மே மாத விடுமுறையை, ஒரு மாத காலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் செல்வி, பொருளாளர் வெற்றி செல்வி, சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் ஜீவானந்தம், சுப்பிரமணியம், மாநகராட்சி மா.கம்யூ., கட்சி கவுன்சிலர் தண்டபாணி உள்பட, பலர் பங்கேற்றனர்.

