/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
4 மாதம் பூட்டி கிடந்த அறிவியல் பூங்கா பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் திறப்பு
/
4 மாதம் பூட்டி கிடந்த அறிவியல் பூங்கா பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் திறப்பு
4 மாதம் பூட்டி கிடந்த அறிவியல் பூங்கா பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் திறப்பு
4 மாதம் பூட்டி கிடந்த அறிவியல் பூங்கா பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் திறப்பு
ADDED : டிச 30, 2025 05:12 AM

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், அறிவியல் பூங்கா, நான்கு மாதங்களுக்கு பின், பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாநகராட்சி சார்பில், 'நமக்கு நாமே' திட்டம் மூலம், 5.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் பலகை, விண்வெளி ஆய்வுகள் சார்ந்த திறனை வளர்த்து கொள்ளும் வகையில், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள், செயல்முறை விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான கண்டுபிடிப்பு மையம், டைனோசர் போன்ற அரிய விலங்குகளின் மாதிரிகள், விளையாட்டு உபகரணங்கள், திரையரங்கம், ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.
இப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூலை, 9ல் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். அவர், திறந்து வைத்து, நான்கு மாதமான நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. கடந்த, 10 நாட்கள் முன் மக்கள் பயன்பாட்டு திறக்கப்பட்டது. நீண்ட நாட்களாக மூடி இருந்ததால், அங்கு எந்தவிதமான பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாமல் திறக்கப் பட்டுள்ளது. இதனால், டைனோசர் போன்ற அரிய விலங்குகளின் மாதிரிகள், விளையாட்டு உபகரணங்கள் ஆகிய பல இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன.
இதனால் பூங்கா வளாகம் புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. குழந்தைகள் விளையாட சிரமப்படுகின்றனர். அங்குள்ள கழிப்பிடங்களை முறையாகப் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக பராமரிப்பு பணி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

