/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி பணியாளர்கள் 5வது நாளாக காத்திருப்பு
/
அங்கன்வாடி பணியாளர்கள் 5வது நாளாக காத்திருப்பு
ADDED : பிப் 12, 2026 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூரில், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில், பென்ஷன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஐந்தாவது நாளாக மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பத்மாதேவி தலைமையில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.

