ADDED : அக் 30, 2024 11:49 PM
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் வட்டார வளமையம் சார்பில், அரசுப்பள்ளி குறுவள மையங்களில் கலைத்திருவிழா போட்டி நடந்தது.
மல்லசமுத்திரம்
வட்டார வளமையம் சார்பில், கடந்த, 23, 24 ஆகிய தேதிகளில் ராமாபுரம்
மாதிரிப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் உள்ள, ஒன்று
முதல் 2ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 3, 4, 5ம் வகுப்பு மாணவர்கள் என
இருபிரிவுகளாக கலைத்திருவிழா நடந்தது.
அதை தொடர்ந்து, 25ல் வட்டார
அளவில் மல்லசமுத்திரம் மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் 8ம்
வகுப்பு மாணவர்களுக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 28, 29 ஆகிய
தேதிகளில், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் நடந்தது. இதில், மண் சிற்பம்,
பானை ஓவியம், காகிதகூழ் செதுக்கு சிற்பம், களிமண் சிற்பம், பரதநாட்டியம்,
நாட்டுபுற நடனம், தெருக்கூத்து, பலகுரல் பேச்சு, செவ்வியல் இசை, இலக்கிய
நாடகம், வீதி நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
மல்லசமுத்திரம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கம், மேற்பார்வையாளர்
சுரேஷ், ஆசிரியர் பயிற்றுநர் சத்தியசிவா, சிறப்பாசிரியர்கள் செல்வகுமார்,
குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.