/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு அருகம்பாளையம் மக்கள் மனு
/
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு அருகம்பாளையம் மக்கள் மனு
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு அருகம்பாளையம் மக்கள் மனு
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு அருகம்பாளையம் மக்கள் மனு
ADDED : ஆக 05, 2025 01:02 AM
கரூர், மின் மயானம் அமைத்தால் பாதிப்பு ஏற்படும் என, அருகம்பாளையம் சுற்று வட்டார மக்கள் சார்பில், கரூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 5வது வார்டில் அருகம்பாளையம் ஓட்டியுள்ள பகுதியில் மயானம் அமைத்துள்ளது. இதனை சுற்றி, 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த மயானத்தில், சடலங்களை எரியூட்டாமல் புதைத்து வருகின்றனர்.
தற்போது, மின் மயானமாக மாற்றுவதற்கு பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. மின் மயானமாக மாற்றினால், வெளிவரும் புகையால் துர்நாற்றம் வீசும் அபாயம் உள்ளது. பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளை மக்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதனால், மின் மயானமாக அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாற்று இடத்தில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.