/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீபாவளியை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தீபாவளியை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 09, 2025 12:51 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில், தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த, விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
அரவக்குறிச்சியை சுற்றியுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில், தீயணைப்புத்துறை வீரர்கள் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, சிறுவர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் பட்டாசு வெடிக்க வேண்டும். மேலும் காலணி அணிந்து கொண்டு வெடிக்க வேண்டும். பட்டாசுகளை
மைதானங்கள் மற்றும் சமதளத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.
பட்டாசு மற்றும் புஸ்வாணங்கள் வெடிக்கும் போது, அருகில் தண்ணீர் வாளி வைத்திருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது நீண்ட வத்திக்குச்சிகளை வைத்து, பட்டாசுகளின் பக்கவாட்டில் சற்று தொலைவில் நின்று கொண்டு பற்ற வைக்க வேண்டும். மேலும் பருத்தி ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை தெரிவித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.