sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட விழிப்புணர்வு

/

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட விழிப்புணர்வு

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட விழிப்புணர்வு

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட விழிப்புணர்வு


ADDED : அக் 19, 2025 02:31 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தீயணைப்புத்துறை சார்பில், தீ விபத்தில்லா தீபா-வளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து, பள்-ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்த பொதுமக்களிடையே விழிப்-புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தீயணைப்பு துறை நிலைய அலு-வலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய வீரர்கள் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். அப்-போது அவர்கள் கூறியதாவது:தீ விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், பாதுகாப்பான முறையில் பட்டாசுளை வெடிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டுமே, பட்டாசு-களை வெடிக்க வேண்டும். குழந்தைகள் சட்டை பையில் பட்-டாசு வைக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. பட்டாசுகளை கடையிலிருந்து வாங்கி, பாதுகாப்பாக வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும். சமையல் அறைக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக் கூடாது. பெரியவர்கள் மேற்பார்வையில் மட்டுமே, குழந்தை-களை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். வெடிக்காத பட்-டாசுகளை கைகளில் தொடவோ, காலால் மிதிக்கவோ கூடாது. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us