/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
/
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
ADDED : நவ 15, 2024 02:07 AM
குளித்தலை, நவ. 15-
குளித்தலை மேற்கு ஒன்றியம், இனுங்கூர் பஞ்., புதுப்பட்டியில் நேற்று மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழிதியாகராஜன் வளர்ச்சி நிதியில் இருந்து, பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் புதிய சாலை, குடிநீர் மேல் நீர்தேக்க தெட்டி திறப்பு விழா நடந்தது.
ஒன்றிய செயலர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழி தியாகராஜன், யூனியன் கமிஷனர் ராஜேந்திரன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுப்பட்டி, கொண்ணாச்சிபட்டியில் பயணிகள் காத்திருப்பு அறை கட்டும் பணியை, பூமி பூஜை செய்து எம்.எல்.ஏ., மாணிக்கம் தொடங்கி வைத்தார்.
இதேபோல், இனுங்கூர் காஜா காலனியில் மேல்நிலை நீர் தேக்கதொட்டி, மேலசுக்காம்பட்டியில் புதிய தார்ச்சாலை பணி, பொய்யாமணியில், 150 வீடுகளுக்கு தனிநபர் குடிநீர் இணைப்பு, நடைபாலத்தில் புதிய சிமென்ட் சாலை அமைத்தல், குமாரமங்கலம் பஞ்., மேல ஆரியம்பட்டியில் 90 வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு, ராஜேந்திரம் கிராமத்தில் கழிவு நீர் வடிகால் அமைத்தல், பரளி கிராமத்தில் நாடக மேடை அமைத்தல், வாலாந்துாரில் சிமென்ட்சாலை அமைத்தல் ஆகிய பணிகளை எம்.எல்.ஏ., மாணிக்கம் துவக்கி வைத்து பேசினார்.
இனுங்கூர், ராஜேந்திரம் பஞ்., தலைவர்கள் பாலு, செந்தில்குமார், ரத்தினவள்ளி யூனியன் கவுன்சிலர் சங்கீதா பூபதி மற்றும் தி.மு.க., பொறுப்பாளர்கள், பொது மக்கள் கலந்து
கொண்டனர்.