/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாக்காளர் பட்டியலில் ஊழல் செய்து பா.ஜ., வெற்றி பெற பார்க்கிறது: எம்.பி.,ஜோதிமணி

ADDED : நவ 06, 2025 01:01 AM
கரூர், '' வாக்காளர் பட்டியலில் ஊழல் செய்து, பா.ஜ., வெற்றி பெற பார்க்கிறது,'' என, கரூர் காங்.,- - எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார்.
கரூரில் காங்., - எம்.பி., ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:
ஹரியானா மாநிலத்தில், பா.ஜ., ஓட்டு திருட்டு மட்டுமின்றி, அரசாங்கத்தையே திருடியுள்ளது. இதுகுறித்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விளக்கமாக கூறியுள்ளார். நாட்டில் கடந்த, 1952 முதல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தேர்தல் நடந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த, 10 மாதங்களுக்கு முன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை வெளியிட்டது தேர்தல் ஆணையம்தான். அரசியல் கட்சிகள் தயார் செய்யவில்லை.
இந்த பட்டியலை வைத்து கொண்டு, திருத்தம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு என்ன பிரச்னை உள்ளது என தெரியவில்லை.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., மூலம் ஓட்டு திருட்டு நடப்பதை தடுக்க பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் தயாராக இருக்க வேண்டும். எஸ்.ஐ.ஆரை எதிர்த்து வீதியில் போராட வேண்டும்.
ஹரியானா உள்ளிட்ட, பல மாநிலங்களில் செய்ததை போல, வாக்காளர் பட்டியலில் ஊழல் செய்து, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்து, பா.ஜ., வெற்றி பெற பார்க்கிறது. இதை தமிழகத்தில், பொதுமக்கள் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.