ADDED : நவ 06, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, டூவீலர் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி அருகே காமக்காப்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி முத்தம்மாள், 75. இவர் நேற்று முன்தினம் இரவு. காமக்காப்பட்டி சாலையில் நடந்து சென்று
கொண்டிருந்தார்.
அப்போது கர்நாடகா மாநிலம், தாவன்கிரி பகுதியை சேர்ந்த தாதாபீர் என்பவரது மகன் சமீர், 28, ஓட்டி வந்த கேடிஎம் டியூக் பைக் வேகமாக மோதியதில், முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மகன் பழனிசாமி அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து
வருகின்றனர்.

