/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவலர் எழுத்து தேர்வுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: கரூர் எஸ்.பி.,
/
காவலர் எழுத்து தேர்வுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: கரூர் எஸ்.பி.,
காவலர் எழுத்து தேர்வுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: கரூர் எஸ்.பி.,
காவலர் எழுத்து தேர்வுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: கரூர் எஸ்.பி.,
ADDED : நவ 06, 2025 01:00 AM
கரூர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும், காவலர் எழுத்து தேர்வுக்கு கரூர் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கரூர் எஸ்.பி., அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும், 9ல் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் சிறை காவலர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடக்கிறது. கரூர் வெண்ணைமலை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கரூர் கொங்கு மெட்ரிக் பள்ளி, கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய, மூன்று தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடக்கிறது.
இதற்காக, கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும், 9ம் தேதி காலை, 7:00 மணி முதல் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மதியம் தேர்வு மையத்தில் இருந்து, 1.30 மணி முதல் மீண்டும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதை, தேர்வாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.