/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
/
அரவக்குறிச்சியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
அரவக்குறிச்சியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
அரவக்குறிச்சியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
ADDED : ஆக 30, 2024 05:00 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம் பள்ளப்பட்டியில் நடைபெற்றது.
பா.ஜ., சார்பில் நாடு முழுவதும், செப்டம்பரில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம் நேற்று நடந்தது. ஒரு மாதத்தில் அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத்தில் 30 ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கு ஒன்றிய தலைவர் ஜவஹர்லால் பயிலரங்கத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பாளராக மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், கல்வியாளர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் வீரமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். மகளிரணி ஒன்றிய தலைவர் மல்லிகா நன்றி கூறினார்.