/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுதேசி பொருட்களை பயன்படுத்த பா.ஜ., கையெழுத்து இயக்கம்
/
சுதேசி பொருட்களை பயன்படுத்த பா.ஜ., கையெழுத்து இயக்கம்
சுதேசி பொருட்களை பயன்படுத்த பா.ஜ., கையெழுத்து இயக்கம்
சுதேசி பொருட்களை பயன்படுத்த பா.ஜ., கையெழுத்து இயக்கம்
ADDED : அக் 15, 2025 01:49 AM
கரூர், பா.ஜ., சார்பில் நாடு முழுவதும், சுயசார்பு பாரதம் சங்கல்பம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர்-கோவை சாலையில் எல்.ஜி.பி., நகரில், மாவட்ட பா.ஜ., சார்பில் உறுதிமொழி படிவம் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். வீடு தோறும் சுதேசி எனது பெருமை, சுதேசி பொருள்களை பயன்படுத்துவோம் என உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டது. அவர்கள், வீடுகளில் சுதேசி பொருள்களை பயன்படுத்துவோம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மாவ ட்ட துணைத் தலைவர் சக்திவேல் முருகன், மாவட்ட செயலர்கள் முருகேசன், வெங்கடாசலம், கரூர் மத்திய மாநகர தலைவர் சரண்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.