/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாசன கண்ணாறு ஆக்கிரமிப்பு துார்வார விவசாயிகள் கோரிக்கை
/
பாசன கண்ணாறு ஆக்கிரமிப்பு துார்வார விவசாயிகள் கோரிக்கை
பாசன கண்ணாறு ஆக்கிரமிப்பு துார்வார விவசாயிகள் கோரிக்கை
பாசன கண்ணாறு ஆக்கிரமிப்பு துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 15, 2025 01:48 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்,. தென்கரை பாசன வாய்க்காலில், டவுன் பஞ்., அலுவலகம் எதிரில் செல்லும் பாசன கண்ணாறு தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கண்ணாற்றில் தண்ணீர் செல்ல முடியாமல், விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்கரை பாசன வாய்க்காலில், விவசாயத்திற்கு அதிகளவு தண்ணீர் திறந்தும், பாசன கண்ணாற்றில் தண்ணீர் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள்,
குளித்தலை நீர்வளத்துறை எஸ்.டி.ஓ., மற்றும் உதவி பொறியாளரிடம் பலமுறை கோரிக்கை மனு வைத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாசனத்திற்கு தண்ணீர் வழங்காமல் உள்ளனர்.
இந்நிலையில், பாசன கண்ணாற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீயிடம் கோரிக்கை மனு அளித்தனர்.