/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் பிரச்னையை கண்டித்து பஸ்சை மறித்து மறியல் போராட்டம்
/
குடிநீர் பிரச்னையை கண்டித்து பஸ்சை மறித்து மறியல் போராட்டம்
குடிநீர் பிரச்னையை கண்டித்து பஸ்சை மறித்து மறியல் போராட்டம்
குடிநீர் பிரச்னையை கண்டித்து பஸ்சை மறித்து மறியல் போராட்டம்
ADDED : செப் 13, 2024 06:47 AM
கிருஷ்ணராயபுரம்: மத்திப்பட்டி கிராமத்தில், குடிநீர் பிரச்னையை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து மத்திப்பட்டி கிராமத்தில், பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக, சரி வர குடிநீர் வினியோகம் செய்யாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குடிநீர் தேவைக்கு பல இடங்களுக்கு சென்று, பிடித்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பகுதி மக்கள் நேற்று காலை, 9:00 மணிக்கு மத்திப்பட்டி கடை வீதி அருகில் டவுன் பஸ்சை வழி மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். லாலாப்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.