/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போத்துராவுத்தன்பட்டி பஞ்., செயலாளர் 'சஸ்பெண்ட்'
/
போத்துராவுத்தன்பட்டி பஞ்., செயலாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 01, 2024 02:32 AM
கிருஷ்ணராயபுரம்,:போத்துராவுத்தன்பட்டி
பஞ்சாயத்து செயலாளர், நிதி முறைகேடு செய்ததால் அவரை மாவட்ட
நிர்வாகம் தற்காலிக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூர்
மாவட்டம், கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட
போத்துராவுத்தன்பட்டி பஞ்சாயத்தில் பஞ்சாயத்து செயலாளராக
லட்சுமணன், 58, என்பவர் பணிபுரிந்து வந்தார். நேற்றுடன் அவர் ஓய்வு
பெற வேண்டிய நிலையில், அவர் பணிபுரிந்த சமயத்தில் பஞ்சாயத்து
நிதியில் முறைகேடு நடத்திருப்பதாக ஊராட்சி தணிக்கையில்
தெரியவந்தது. மேலும் மாவட்ட தணிக்கை மற்றும் மாநில தணிக்கையில் நிதி
முறைகேடு செய்ததும் கண்டறியப்பட்டது.
இது குறித்து, மாவட்ட
நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று ஓய்வு
பெறும் நிலையில் இருந்த, போத்துராவுத்தன்பட்டி பஞ்சாயத்து
செயலாளர் லட்சுமணனை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து, மாவட்ட
நிர்வாகம் உத்தரவிட்டது.

