/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி தாயாருக்கு தற்காலிக வேலை
/
மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி தாயாருக்கு தற்காலிக வேலை
மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி தாயாருக்கு தற்காலிக வேலை
மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி தாயாருக்கு தற்காலிக வேலை
ADDED : நவ 21, 2024 01:38 AM
மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
தாயாருக்கு தற்காலிக வேலை
குளித்தலை, நவ. 21-
மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியானதை தொடர்ந்து, அவரது தாய்க்கு டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணி வழங்கப்பட்டது.
குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., தமிழ்ச்சோலை கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளி மதன்குமார்- ஷீலா தம்பதியரின் மகன் ரோகித்சர்மா, 6. நேற்று முன்தினம் மதியம், அதே பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் பலியானார்.குளித்தலை போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உட்படுத்தினர். உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் சிறுவன் இழப்புக்கு காரணம் டவுன் பஞ்., நிர்வாகத்தின் அலட்சியபோக்கே என குற்றம் சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் இந்துமதி, டி.எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், நேற்று காலை எம்.எல்.ஏ., மாணிக்கம், ஒன்றிய தி.மு.க., செயலாளர் தியாகராஜன், டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் பேச்சு
வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, டவுன் பஞ்., எலக்ட்ரீஷியன் ராமச்சந்திரனை பணியிடமாற்றம் செய்தல், தமிழ்சோலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் படிப்படியாக செயல்படுத்துதல், சிறுவனின் தாய்க்கு டவுன் பஞ்சாயத்தில், தற்காலிகமாக வேலை வழங்கல் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என டவுன் பஞ்,, தலைவர் ராஜேஸ்வரி தெரிவித்தார். சிறுவனின் உறவினர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து, அவரது சடலத்தை பெற்றுக்கொண்டு,
நல்லடக்கம் செய்தனர்.