ADDED : அக் 29, 2026 03:31 AM
கரூர்: கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட்டில், நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கரூர் மாவட்டத்தில், தமிழக சட்டசபை அரசு உறுதிமொழி குழு சார்பில், கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பொது-மக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டன. அதன் அடிப்ப-டையில், உடனடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்-றன.
இதன் ஒரு பகுதியாக, கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சப்- கலெக்டர் வெங்கடேஸ்வரன் தலைமையில், அதிகாரிகள் குழுவினர் நேற்றுஆய்வு மேற்கொண்டனர். வருவாய்த்துறை, மாநகராட்சி நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்-வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டனர். ஆய்வின்-போது, பஸ் ஸ்டாண்ட் நடைபாதை மற்றும் பொதுமக்கள் நட-மாட்டத்திற்கு இடையூறாக, ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் உடனடியாக அகற்றப்பட்டன. தொடர்ந்து அங்குள்ள கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனைக்காக வைக்-கப்பட்டிருந்த காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்-கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விதிமீறல்களில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்ப-வர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை தொடரும் என அதிகா-ரிகள் எச்சரித்துள்ளனர்.
