ADDED : மே 09, 2025 02:06 AM
கரூரில் செயல்பட்ட, எஸ்.வி.எஸ்., ஜூவல்லரியில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என, கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராஜாசோமசுந்தரம்தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சபரிசங்கர், 36, என்பவருக்கு சொந்தமான சேலத்தை தலைமையிடமாக கொண்டு எஸ்.வி.எஸ்., ஜூவல்லரி செயல்பட்டு வந்தது. இதன் கிளை, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் செயல்பட்டு வந்தது. இங்கு, பழைய நகைக்கு புதிய நகை, வைப்பு தொகைக்கு கூடுதல் வட்டி என்று போலியான திட்டங்களை அறிவித்தனர். இதனை நம்பி, கரூர் வெள்ளியணையை சேர்ந்த ராமலிங்கம்என்பவர், தனது குடும்பத்தினர்பெயரில், 17 லட்சம் ரூபாய் டிபாசிட்செய்துள்ளார். இதற்குரிய அசல், வட்டியும்கொடு
க்காமலும்மோசடி செய்ததால், கரூர் குற்றப்பிரிவு போலீசில் ராமலிங்கம்புகார் அளித்தார்.இந்நிறுவனம் பலரிடம் பணம் பெற்று, மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததால் வழக்கானது, கரூர்மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசர் நிஷா தலைமையில், தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சபரிசங்கர்கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள்உடனடியாக புகார் அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.