/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலின பாகுபாடுக்கு எதிரான பிரசாரம் இன்று தொடக்கம்: கலெக்டர் தகவல்
/
பாலின பாகுபாடுக்கு எதிரான பிரசாரம் இன்று தொடக்கம்: கலெக்டர் தகவல்
பாலின பாகுபாடுக்கு எதிரான பிரசாரம் இன்று தொடக்கம்: கலெக்டர் தகவல்
பாலின பாகுபாடுக்கு எதிரான பிரசாரம் இன்று தொடக்கம்: கலெக்டர் தகவல்
ADDED : நவ 25, 2024 02:46 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், பாலின பாகுபாடு, வன்முறைக்கு எதிரான பிரசாரம், இன்று முதல் தொடங்குகிறது என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: குழந்தைகள் திரு-மணம், குடும்ப வன்முறை ஆகியவற்றால் சமூகம் மற்றும் தனி-நபர் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு ஆதரவு, சேவை மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பாக அரவக்குறிச்சி, கடவூர், தோகைமலை ஆகிய வட்டாரங்களில் பாலின வள மையங்கள், இன்று முதல் தொடங்கப்படுகிறது.அதில், பாலின பாகுபாடு, வன்முறைக்கு எதிரான பிரசாரம் இன்று முதல், வரும் டிச., 23 வரை நடக்கிறது. குழந்தை திரு-மணம் தடுத்தல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மது ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலின வன்முறைகளை தடுத்தல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாத்தல் ஆகிய தலைப்புகளில் பிரசாரம் மேற்கொள்-ளப்பட உள்ளது. அதில், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.